ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை!

ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் தடைவிதித்துள்ளது. 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த மத்திய ரயில்வே துறை , இந்த தடை உத்தரவு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

 

ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை கடைபிடிக்க முதற்கட்டமாக 360 முக்கிய ரயில் நிலையங்களில் 1753 பிளாஸ்டிக் பாட்டில்கள் இயந்திரங்களை அமைக்க ஆணை பிறப்பித்துள்ளது. அதேவேளையில் ரயில்வே மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழகத்திடம் இருந்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டு உள்ளது.

 

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்ற போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஐஆர்சிடிசி உதவியோடு தடையை மீறி நடை மேடைகளில் பாட்டில்களை குடிநீர் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

 

இதை கவனத்தில் கொண்டு கட்டாயமாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய ரயில்வே நிர்வாகம் நீண்ட தூரம் செல்லும் ரயில் உணவகங்கள் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Leave a Reply