திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி ரோட்டில் இன்று 19.08.19 காலை பேருந்து பஞ்சராகி நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் நெருக்கடியில் தவித்துக் கொண்டிருந்தினர். உடனே நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 மாணவர்களும், இளைஞர் நெஞ்சிலுவை சங்க மாணவர்களும், ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தினார்கள்.
அங்கு பஞ்சராகி நின்றிருந்த அரசு பஸ்ஸின் டயரை மாற்றிக் கொடுத்து உள்ளனர். அங்கிருந்த வாகன ஓட்டிகளும், பேருந்து நடத்துனரும் பாதுகாப்பிற்கு வந்த காவல் துறையினரும் மாணவர்களை பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.
இன்று மாதிரி தேர்வு தொடங்குகின்ற நிலையிலும், பொதுமக்களுக்கு சேவை செய்யும் அலகு 2 மாணவர்களை உங்கள் சார்பாக வாழ்த்துகிறேன் என்று ஒருங்கிணைப்பாளர் கூறினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி பார்வையிட்டார்.