14 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்ததில் பார்வை இழந்த 11 பேர்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்தூரில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் ‘தேசிய பார்வையின்மை தடுப்பு திட்டம்’ நிகழ்வு நடைபெற்று உள்ளது.இந்த நிகழ்வில் 14 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அதன் மறு நாளிலே 11 பேர் தங்களது கண் பார்வையை இழந்து உள்ளனர். அவர்களுக்கு கண்களில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாகவே அவர்கள் கண் பார்வையை இழந்துள்ளனர். ஆனால், எதனால் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும்,கண்பார்வையினை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.நாங்கள் கண்பார்வையை சரிசெய்ய வந்த இடத்தில் பார்வையினை இழந்துள்ளோம்.

 

தற்போது சிகிச்சை எடுத்து வருவதால், எனக்கு அவ்வப்போது பார்வை தெரிகிறது. முழு பார்வை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறினார்.மற்றொருவர் கூறும்போது, “கண் பார்வையை இழந்ததற்காக எங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் தேவையில்லை. எங்களுக்கு முழு பார்வை கிடைக்கச் செய்தால் போதுமானது.

 

சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை என்று கேள்விப்பட்டு வந்தோம். எதிர்பாராத விதமாக இப்படி
ஆகிவிட்டது” என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply