ஜப்பானில் ‘குரோசா’ புயல்! வெள்ளம், நிலச்சரிவு

ஜப்பானை ‘குரோசா’ என்கிற புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவறுத்தப்பட்டனர்.ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் ஹிரோஷிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் பலத்த புயல் காற்று தாக்கியது.

 

இதற்கு ‘குரோசா’ என பெயரிடப்பட்டு உள்ளது. மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் வீசியதுடன் இடைவிடாத மழையும் பெய்தது.மழையால் ஆயிரக் கணக்கான மரங்கள் , மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிலஇடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.


Leave a Reply