சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டு விருது

சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்திற்கு வழங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி, ஊக்கம் அளிக்கும் வகையில், சிறப்பாக செயல்படும், ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளுக்கு, சுதந்திர தினத்தன்று, முதல்வர் விருது வழங்கப்படும்.

இந்த ஆண்டு, சிறந்த மாநகராட்சிக்கான விருது, சேலத்திற்கு வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர், சதீஷிடம், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை, முதல்வர், இ.பி.எஸ்., வழங்கினார்.தர்மபுரி, வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை, சிறந்த நகராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டன. அதற்கு முறையே, 15, 10, 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


Leave a Reply