கடமலைக்குண்டு அருகே மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே மேகமலை வனப்பகுதியில் வனச்சரகர் சதீஷ் கண்ணன், மேகமலை வனவர் சோனைமுத்து மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து சென்றனர்.
மண்ணூத்து மலையடிவாரம் பகுதியில் சென்றபோது, 2 பேர் மானை வேட்டையாடி கறி சமைத்து சாப்பிட்டு கொண்டிருப்பது தெரியவந்தது. திடீரென தப்பியோட முயன்றவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், மண்ணூத்து பகுதியை சேர்ந்த செல்வகுமார் (38), முருகன் (41) என தெரியவந்தது.இருவரையும் வனத்துறையினர் கைது செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.