மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி கமிஷனர் ஷரவன் குமார் ஜடாவத் அறிவிப்பு

கோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ஷரவன் குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சவாலான ஒன்றாக இருப்பதாகவும், மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை பிரித்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை நடைபெறுவது போல மாநகரில் 51 இடங்களில் சிறிய அளவில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் திட்டம் இந்த மாத இறுத்திக்குள் கொண்டு வரப்படும் என கூறிய அவர், இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், குப்பை போடும் மக்களிடம் வரி வாங்க வேண்டும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,அதன் படி விரைவில் குப்பை வரி வாங்குவோம் என தெரிவித்தார்.மேலும், மழை நீர் சேமிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், நாளைக்குள் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.


Leave a Reply