கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்

2011 முதல் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கினார். விருது பெற்ற நடிகர் நடிகையர்கள் கலைஞர்களுக்கு தமிழக மக்கள் தொடர்பாளர்கள் சங்கம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

 

இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு எல்லா வருடமும் கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். இதற்கான தேர்வுக்குழு மூலம் சாதனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழக அரசால் இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது.

 

பலகட்ட போராட்டங்கள் வழக்குகளைத் தாண்டி இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா தமிழக அரசு சார்பாக நடைபெறுகிறது.எட்டு ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு பிஆர்ஓ சங்க உறுப்பினர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

பி.ஆர்.ஓ.யூனியனின் கெளரவ தலைவர் நெல்லை சுந்தர்ராஜன், பி.ஆர்.ஓ. யூனியனின் கௌரவ உறுப்பினரும், நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைஞானம், ஏ.எம். ரத்னம், இயக்குனர்கள் பவித்ரன், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, டி.பி.கஜேந்திரன் நடிகர்கள் கார்த்தி, பிரபுதேவா, விஜய் சேதுபதி, சசிகுமார்.விஜய் ஆண்டனி, சந்தானம், பாண்டியராஜன், பிரசன்னா , சூரி, ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, சரவணன், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ், பாண்டு, சிங்கமுத்து, சிவன் சீனிவாசன், ராஜசேகர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

நடிகைகள் குட்டி பத்மினி, நளினி, சாரதா, காஞ்சனா, பிரியாமணி, ராஜஸ்ரீ, எஸ்.என்.பார்வதி, பி.ஆர்.வரலட்சுமி, ஸ்ரீலேகா ராஜேந்திரன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடலாசிரியர் யுகபாரதி, நடன இயக்குனர்கள் புலியூர் சரோஜா, தாரா ஸ்டண்ட் இயக்குனர் ஜுடோரத்னம், பின்னனி பாடகர்கள் எஸ்.ஜானகி, சசிரேகா, மாலதி, அபஸ்வரம் ராம்ஜி, கிருஷ்ணராஜ், உண்ணிமேனன், உலகநாதன், கானாபாலா, வேல்முருகன், பரவை முனியம்மா,ஒளிப்பதிவாளர்கள் பாபு, ரத்னவேலு, ரவிவர்மன் , புகைப்பட கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, பத்திரிகையாளர்கள் லேனா தமிழ்வாணன், அசோக்குமார், மணவை பொன் மாணிக்கம் ஆகிய அனைவருக்கும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பிஆர்ஓ சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply