ஐ லவ் யு குருநாதா! சாண்டியும் கவினும் என்ன பாட்டு பாட போறாங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஒருவரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் இன்ஸ்ட்ரக்ஷன் முடிந்ததும் சிஷ்யா என்றது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்று பேர் நாமினேஷனில் உள்ளனர். லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி ஆகியோர் ஆவர்.

 

இந்த வாரம் சாக்ஷி வெளியேற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்படி சாக்ஷிதான் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சாண்டியை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்தார் பிக்பாஸ். அப்போது நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள மூன்று பேருக்கும் கவினுடன் சேர்ந்து பாடல் தயாரிக்கும் படி சாண்டியிடம் கூறினார் பிக்பாஸ்.

 

மேலும் இந்த விஷயம் யாருக்கு தெரிய வேண்டாம் என்றும் கூறினார் பிக்பாஸ். அதற்கு சரி என்ற சாண்டி, குருநாதா இந்த மூன்று பேரில் நாளை கண்டிப்பாக ஒருவர் வெளியே போய்விடுவாரா என மிகவும் ஆர்வமாக கேட்டார்.


Leave a Reply