தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் தொண்டியில் மீனவர்களிடம் பறிமுதல், இரண்டு மீனவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி இப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இந்த பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிப்பட்டு கொள்ளை கொண்டு மீன் பிடிப்பதாக தெரியவந்தது. அப்பகுதியில் ரோந்து சென்றபோது புதுக்குடியைச் சேர்ந்த கார்மேகம் (30), கனகராஜ் (35) ஆகியோரது படகில் 22.ஜெலட்டின் 51டெட்டனேட்டர், 1மீட்டர் வயர் ஆகிய பொருட்களை கைப்பற்றி மீனவர்களை கைது செய்து தொண்டி கடலோர காவல்படையினர் விசாரித்து வருகிறார்கள்.

இதே பகுதியில் கடந்த 14ஆம் தேதி வெடிபொருட்கள் வைத்திருந்ததாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த பகுதியில் வெடிவைத்து மீன்பிடிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது என்றும் கடலோர காவல்படையினர் மாதம் ஒரு வழக்கு பதிய வேண்டும் என்பதற்காக இவ்வாறான வழக்கு பதிந்து வருகிறார்கள் என்றும், இதையே தொழிலாக வைத்திருக்கும் மீனவர்களை கைது செய்வதில்லை என்றும் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.


Leave a Reply