ஆபத்தை உணராமல் மீன் பிடிக்கும் மக்கள்…தாசில்தாரின் அலட்சியமான பதில்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அணையின் தற்போதைய நீர் மட்டம் 97 அடி.அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர் வரத்தான 16 ஆயிரம் கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இதனால் பவானி ஆற்றில் தொடர்ச்சியாக 4 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினிடையே மக்களில் சிலர் மீன் பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் ஒரு சிலர் செய்யும் இதுபோன்ற வேலைகளினால் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்க வேண்டிய காவல் துறை,வருவாய் துறை, தீயணைப்புத்துறையினரின் அறிவுறுத்தலை மீறி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி கேட்ட பொழுது இது குறித்து பலமுறை எச்சரித்தும் அதனையும் மீறி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும்,நானும் சொல்றேன் என்பது போல அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாக்க வேண்டிய தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்காமல் ” சொல்றேன் ” என்பது போல அலட்சியமாக பதில் சொல்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply