முன்னாள் மாணவர்களின் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’

கோவையில் 25 ஆண்டு முன்னர் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பில் நடைபெற்ற நினைவுகளின் சங்கமம் நடைபெற்றது.

 

கோவையில் மிக பழமையான கல்லூரிகளில் ஒன்று பி.எஸ்.ஜி.கலை கல்லூரி.இதில் பயின்ற பலர் தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் முக்கிய பொறுப்புகளிலும் இன்னும் பலர் முன்னணி தொழிலதிபர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் பயின்ற 1991-94 ஆம் ஆண்டு முன்னால் மாணவர்கள் சந்திப்பின் 25 வது வெள்ளி விழா ஆண்டு கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. நினைவுகளின் சங்கமம் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மாணவ,மாணவிகள் மற்றும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் சந்தித்து ஒருவரை ஒருவர் சந்தித்து மனம் நெகிழ்ந்தனர்.

இது குறித்து பேசிய பி.எஸ்.ஜி முன்னாள் மாணவர் சங்க தலைவர் லட்சுமி நாராயணசாமி, தொடர்ந்து மூன்று ஆண்டாக இந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெறுவதாக கூறிய அவர், இந்த விழாவில் 600 க்கும் மேற்பட்ட முன்னால் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என பிற மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்தும் இதில் பங்கேற்று உள்ளதாக அவர், தெரிவித்தார்.


Leave a Reply