மானாமதுரையில் தலித் இளைஞர்கள் இருவருக்கு வெட்டு – எஸ்.பி தலைமையில் போலிசார் குவிப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்த தலித் இளைஞர்கள் இருவரை சிலர் வெட்டியதால் மானாமதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்தவர் வீரச்சாமி மகன் சதீஸ்(25) மற்றும் முத்து மகன சதீஸ் (25) ஆகியோர் கிருஷ்ணராஜபுரம் தெருவில் உள்ள சாலையின் அருகே நண்பர்களுடன் மொபைல் போன் பார்த்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர்கள் 4 பேர் கொண்ட கும்பல் வீரச்சாமி மகன் சதீஸ்(25) மற்றும் முத்து மகன சதீஸ் (25) ஆகிய இருவரையும் விரட்டி வெட்டி விட்டு தப்பி ஒடி விட்டனர் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி ரோஹித் நாதன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கபட்டனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி ரோஹித் நாதன் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் இதனால் மானாமதுரையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Leave a Reply