இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா 118 ஆம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளிவாசல் முன் ஊர்வலமாக கிளம்பியது.

நாட்டியக் குதிரைகள் நடனம் , வாண வேடிக்கை வானில் வர்ண ஜாலம், பேன்ட் வாத்தியங்கள் முழக்கம் என நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்த ஊர்வலம் தர்ஹாவை வந்தடைந்தது. அங்கு சந்தனக் கூடு தர்ஹாவை மூன்று வலம் வந்தது. இதனையொட்டி மினர்வா கோபுரத்தில் இருந்து மலர்கள் தூவ நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது.

ஆகஸ்ட்18, 19 தேதிகளில் சந்தனக் கூடு விழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியிறக்கப்படுகிறது. விழா குழு தலைவர் ஹாஜா நஜிமுதீன், துணைத் தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல் ஹமீது, செய்யது இப்ராஹிம்ஷா, செயலர் களஞ்சியம், துணை செயலர்கள் ஹபிபுல்லா, கபிபுல்லா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜமாத் தலைவர் மீராசா, ஜெமீல் கான் மற்றும் செய்யதலி ஒலியுல்லா தர்ஹா நிர்வாகிகள், சுல்தானியா சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.






