காற்றை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்படும் – அரசு கல்லூரி மாணவர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு 2 சார்பாக மத்திய அரசின் தூய்மை பதினைந்து திட்டத்தை ஏழு கட்டங்களாக நடத்தவேண்டும் அதன் படி இரண்டு கட்டங்களை முடிந்துவிட்டு மூன்றாம் கட்டமாக குடிசை பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்படி 06.08.19 அன்று செல்லாண்டிதுறையிலும், 07.08.19 எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நடத்தது.

 

பேராசிரியர் விநாயகமூர்த்தி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் விழிப்புணர்வை தொடங்கி வைத்தார். இன்று 08.08.19 ரங்கநாதபுரத்தில் அலகு 2 மாணாக்கர்கள் நூதன விழிப்புணர்வினை மேற்க்கொண்டனர் இன்று நடந்த நிகழ்வினை மாநகராட்சி உதவி ஆணையர் வாசுகுமார் ரங்கநாதபுரம் பகுதியில் துவக்கி வைத்தார்.

மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வழியுறுத்தியும், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தும், தூய்மையின் முக்கியத்துவத்தையும், கழிப்பறையை பயன்படுத்தவேண்டும், வெளியிடங்களில் மலம் கழிக்க கூடாது போன்றவற்றை முன்நிறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. சிலம்பாட்டம், சுருளாட்டம் போன்றவற்றின் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மரம் வளர்த்தால் மழை வரும், மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர் உயரம், எதிர்காலத்தில் விவசாயம் நன்றாக இருக்கும், குடி நீர் பிரச்சனையும் வராது என்றும் இயற்கையை பாதுகாக்க தவறினால் எதிர்காலத்தில் சுவாசிக்க காற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படுவதை நூதனமாக முதுக்கு பின் சிலிண்டர் வடிவத்தில் உள்ள டப்பாவை கட்டி அதில் மரம் வளர்த்தி அதில் இருந்து வரும் ஆக்ஸிஜனை குழாய் மூலமாக மூக்கிற்கு செல்ல கவசம் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மாணவர்களின் நூதன விழிப்புணர்வை அங்குள்ள பொது மக்கள் வியப்புடன் கண்டு கழித்தனர். பின்பு அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் 37 மாணாக்கர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசரம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் முருகன், பேராசிரியர்கள் முஸ்தாக், தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடினை கல்லூரி பொறுப்பு முதல்வர் புஷ்பலதா செய்திருந்தார்.


Leave a Reply