--- --:--:-- --

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவில் 8 பேர் பலி!

download (3)

கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மேப்பாடி பகுதியில் உள்ள புதுமலையில் நேற்று முன்தினம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

 

இந்த நிலச்சரிவில் இரண்டு தேயிலை தோட்ட குடியிருப்புகள், பள்ளிவாசல், கோவில் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.

 

இந்த நிலச்சரிவில் தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்த 12 வீடுகள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி எத்தனை பேர் மாயமாகி உள்ளார்கள் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும் பலர் சிக்கி இருக்கலாம் எனப்படுகின்றது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon