பத்த வச்சுட்டியே பரட்டை! கவின் பெயரில் வின் இருந்தாலும் அவர் மனசு லாஸ்ஸை தான் விரும்புகிறது

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 6 பேர் வெளியேறியுள்ளனர். தற்போது 10 பேர் பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர்.

இவ்வாறு பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டுள்ள பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிரபல நடிகை கஸ்தூரி வருகை தந்தார். மேலும் அவர் வந்தது முதலே போட்டியாளர்களா அனைவரையும் சூசமாக வச்சு செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே பராரப்பை கிளப்பி ஆறிப்போன விஷயம் கவின், சாக்ஷி, லாஸ்லியா முக்கோண காதல் விவகாரம். இந்நிலையில் அதனை ஊதி கிளப்பும்வகையில் தற்போது கஸ்தூரி, கவின் பெயரில் வின் இருந்தாலும் அவர் மனசு லாஸ்ஸை தான் விரும்புகிறது என்று கூறியுள்ளார். மேலும் அப்பொழுது சாக்ஷியின் முகம் மாறுகிறது. லாஸ்லியா சிரிக்கிறார். இந்த பிரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Leave a Reply