இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் டிவியில் தோன்றி உரை நிகழ்த்த உள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரம் உச்சகட்ட பரபரப்பையடைந்துள்ள நிலையில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்து.

 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மோடி பேச உள்ளாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய பிரச்சினைகள் பற்றி பேச உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரதமர் இதுபோல அறிவித்துவிட்டு டிவியில் தோன்றுவது 3வது முறையாகும்.

 

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி, மோடி பண மதிப்பு பற்றி அறிவித்தார். கடந்த மார்ச் 27ம் தேதி, டிவியில் தோன்றியபோது மிஷன் சக்தி ஏவுகணை தொழில்நுட்ப வெற்றி பற்றி பேசினார்.இன்று மோடி என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலகமெங்கும் ஏற்பட்டுள்ளது.


Leave a Reply