சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினம் வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழிற்படை போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய தொழிற்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தைச்சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்கள் வைத்திருக்கும் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்ட பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

 

விமான நிலையத்திற்கு வெளியேயும்போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி தற்காலிகமாகரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 20-ஆம் தேதிக்கு பிறகே பார்வையாளர்கள் விமான நிலையத்தில் அனுமதிக்கப்படுவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply