விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முகநூல் மூலம் பழகிய திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்த லட்சுமணன் மும்பையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தை சேர்ந்த சேகர்-அமுதா தம்பதிக்குப் பிறந்த திருநங்கை அமிர்தாவுடன் முகநூல் மூலம் நட்பாகி பழகியுள்ளார்.
பின்னர் அமிர்தாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் இடையே உள்ள காதலை அவர்கள் தங்களது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் லட்சுமணன் – அமிர்தா திருமணம் விமர்சையாக நடைபெற்றது.
மேலும் செய்திகள் :
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது ஏன்? - திருமாவளவன் பதில்
நாங்கள் என்ன மனநோயாளியா? - விஜயை பாராட்டியதற்கு சீமான் ரியாக்ஷன்
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
திமுக, அதிமுகவினர் இடையே நடந்த போட்டி..!
விஷமான குடிநீர்..நடுங்கிய சென்னை வாசிகள்..!
கிணற்றில் இருந்து பேயின் சத்தம் கேட்பதாக நினைத்த கிராமம்..!