கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் ஜிஎஸ்டி சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய மேச்சோ நிறுவனத்தின் வணிக தலைவர் அருள் பேசும்பொழுது ஜிஎஸ்டி வரி வரிவிதிப்பிற்கு பின் கட்டுமான தொழில் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை என்றும்,தங்களுடைய பொருட்கள் உலக அளவில் உயர்ந்த இடத்தை பிடித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,உலகிலேயே தரமான கம்பிகளை தங்கள் நிறுவனம் மட்டுமே உற்பத்தி செய்து கொடுத்து கொண்டு இருப்பதாகவும்,எவ்வித இடர்பாடுகளையும் தாங்கக்கூடிய உயர் தரத்துடன் கூடிய கம்பிகளை மேச்சோ நிறுவனம் மட்டுமே கொடுத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மேச்சோ நிறுவனத்தின் தெற்கு இந்திய வணிகம் மமற்றும் விற்பனைப் பிரிவு மேலாளர் சங்கர் உள்பட 500க்கும் மேற்பட்ட சிவில் இன்ஜினியர்கள் கலந்து கொண்டனர்.






