கோவில் அர்ச்சகர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க பிராமணர் சங்கம் கோரிக்கை

கோவில் அர்ச்சகர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக பிராமண சங்க மாநில ஆலோசகர் சிவஸ்ரீ பாலசுப்ரமணிய சிவாச்சாரியர் கோரிக்கை விடுத்துள்ளார்.கோவை,இடையர்பாளையம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோவிலில் அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெற்றது.

கோவையில் முதன் முறையாக நடைபெற்ற இதில் அந்தணர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜெயபிரகாஷ் ஐயர்,மற்றும் ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா ஐயர் ஆகியோர் தலைமை வகித்தனர். பா.ஜ.க. மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி மைதிலி வினோ முன்னிலையில் நடைபெற்ற இதில்,முன்னதாக ஐம்பொன் விக்ரகத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மங்கள இசை முழங்க விக்னேஸ்வர பூஜை மற்றும் கோ பூஜை தம்பதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பின்னர்,இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பழனி புகழ் சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் சைவம் தழைத்தோங்க செய்த நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இந்த ஆடி சுவாதி வேளையில் நடைபெறும் இந்த குருபூஜை விழாவை வரும் காலங்களில் அரசே நடத்த முன் வர வேண்டும் என கூறிய அவர்,கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த குரு பூஜை விழாவில் கோபாலகிருஷ்ணன் ஐயர் உட்பட அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள். கலந்து கொண்டனர்.


Leave a Reply