இராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினம் பறிமுதல்; வாலிபர் கைது!

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. அவருடைய மகன் நாகநாதன் (வயது 34). அரியவகை கடல் உயிரினங்களில் ஒன்றான கடல் பல்லிகளை பிடித்து, பதப்படுத்தி நாகநாதன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாணிக்கம், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளையராஜா, தேவிபட்டினம் கடலோர பாதுகாப்பு குழும சப்–இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் நாகநாதன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

 

அப்போது அங்கு 10 கிலோ அளவுக்கு பதப்படுத்திய கடல் பல்லிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடல் பல்லிகளை பறிமுதல் செய்த கடலோர போலீசார், இதுதொடர்பாக நாகநாதனை கைது செய்தனர்.மேலும் இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தனர்.


Leave a Reply