முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம்!

டெல்லியில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் நேற்று காலமானார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானியும் கண்ணீர் மல்க சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் மற்றும் பிற தலைவர்களும் சுஷ்மாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

 

இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் உடல் டெல்லி லோதி சாலை மயானத்தில், துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


Leave a Reply