பார்லிமென்ட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சட்டம் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத் சிறப்பு பேட்டி அளித்தார்.ஜம்மு – காஷ்மீரில் பெரும் பதற்றம் நிலவுகிறதே?அமர்நாத் யாத்திரையின்போது, பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, யாத்திரை ரத்து செய்யப்பட்டது.மக்கள் கவலைப்பட வேண்டாம். அச்சப்பட தேவையில்லை என்று, கவர்னரும் விளக்கம் அளித்துள்ளார்.காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசின் கொள்கை என்ன?பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்பதே எங்களுடைய கொள்கை. காஷ்மீர், நம் நாட்டின் ஒரு பகுதி.
அனைத்து வகையிலும் வளர்ச்சி பெறுவதற்கு அதற்கு உரிமை உள்ளது.மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் உரிமையையும் பாதுகாப்பதே எங்களுடைய நோக்கம். காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்; எங்களுடைய வளர்ச்சி திட்டங்களால் மேலும் மகிழ்ச்சி அடைவர்.’காஷ்மீர் பிரச்னையை, தோட்டாக்களால் தீர்க்க முடியாது; அரவணைப்பின் மூலமே சாதிக்க முடியும்’ என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளீர்கள்?நாங்கள் மக்களுடன் நேரடியாக பேசுகிறோம்; தீவிரவாதிகளுடன் அல்ல. மாநிலத்தில், 40 ஆயிரம் கிராமங்களில், உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். மிகவும் அமைதியாக, 75 சதவீத மக்கள் ஓட்டளித்தனர்.ஜம்மு – காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து அரசின் திட்டம் என்ன?மிக விரைவில், சட்டசபை தேர்தல் நடக்கும்.