சித்தா முதுகலை தேர்வில் புதுக்கோட்டை மாணவி இந்திய அளவில் முதலிடம்

சித்தா முதுகலை தேர்வில் இந்திய அளவில் புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் ஜி. பொன்மணி முதலிடம் பிடித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.கணேசன். இவரது மகள்தான் பொன்மணி.சுப்பிரமணியபுரத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2013-ல் பிளஸ் 2 படித்தார்.

 

அதில், 1,062 மதிப்பெண்கள் பெற்ற இவர், சேலம் சிவராஜ் சித்த மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இளநிலை சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்) படித்தார்.பின்னர், முதுநிலை பட்டதிற்கான தேர்வை இவர் எழுதியுள்ளார்.அதில் இந்திய மருத்துவக் கல்விக்காக நடைபெற்ற நீட் தேர்வில் அகில இந்திய அளவில் இவர் முதலிடம் பெற்றுள்ளார்.

 

இது குறித்து பொன்மணி கூறியபோது, ‘எம்பிபிஎஸ் கனவில் படித்தேன். ஆனால், சித்தாதான் கிடைத்தது. எனினும், அதையும் விருப்பத்தோடு படித்தேன்.இந்திய மருத்துவக் கல்வியின் (ஆயுஸ்) முதுநிலை பிரிவுக்கு நடத்தப்பட்ட பொது நுழைவுத் தேர்வுக்கான முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.

 

அதில், மொத்தம் 400 மதிப்பெண்ணுக்கு 377 எடுத்து இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்தா ஆராய்ச்சி மையத்தில் மேல்படிப்பு பயில உள்ளேன்’ எனத் தெரிவித்தார்.


Leave a Reply