நடிகர் விஷால் ஜாமினில் வெளிவர முடியாது

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

விஷால் தன் நிறுவன ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வருமானவரித்துறைக்கு செலுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், 2 முறை அனுப்பப்பட்ட சம்மன் கிடைக்கவில்லை என்ற விஷால் தரப்பு வாதம் செய்தது. இதற்கு வருமானவரித்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

 

இதையடுத்து, விசாரணைக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பித்தநீதிமன்றம், இந்த வழக்கை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply