--- --:--:-- --

அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் ரூ.10 ஆயிரமாக உயர்வு

9e4bd0c7532d1c38875b7519c05ecf54

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைகால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கடந்த ஜூலை 20 ஆம் தேதி பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

அவர் வெளியிட்ட அறிவிப்பில்,அரசு ஊழியர்கள் பண்டிகை முன் பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் .ஏற்கனவே இருந்த ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

இந்த நிலையில் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைகால முன்பணத்தை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் அரசாணை வெளியிட்டு உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon