இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருக்கிறது.இந்தோனேசியாவில் சமீப காலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலும் அங்கு சுமத்ரா தீவு , பாலி, லாம்பாக் ஆகிய மூன்று தீவுகளிலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகி உள்ளது .
தற்போது இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் மிக மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருக்கிறது.நிலநடுக்கத்தை அடுத்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாண்டன் பகுதியில் இருந்து 151 கிமீ தருணத்தில் கடலுக்கு அடியில் 42.8 கிமீ ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.சரியாக 17 நிமிடம் இந்த நிலநடுக்க உணரப்பட்டது. அந்த தீவில் உள்ள சில வீடுகள், கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் தலைநகர் ஜகர்த்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள், என்ன பாதிப்பு என்று முழு விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இதுகுறித்து விரிவான விவரம் வெளியாகும்.