கேபிள் கட்டணம் குறைப்பு… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கேபிள் டிவி கட்டணம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து முதல்வர் எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 35.12 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து இதுவரை இலவசமாக வழங்கியுள்ளது.

தற்பொழுது பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கி வருகின்றது. வருகின்ற ஆகஸ்ட் 10, 2019 முதல் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் தமிழ்நாடு மக்களின் கோரிக்கையை ஏற்று அமலுக்கு வருகிறது.

 

இந்த சந்தாவானது, தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) நிர்ணயிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.


Leave a Reply