கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி தேர்வு

கர்நாடக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக பாஜ‌கவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார்.

 

இதனையடுத்து இன்று அவர் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர்.

 

இதனையடுத்து காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரான ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் கர்நாடக சட்டப் பேரவையின் புதிய சபாநாயகர் பாஜக எம்.எல்.ஏ விஸ்வேஷ்வர் ஹெக்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply