பொழுதுபோக்கு பூங்காவில் சுனாமி! வைரல் வீடியோ

யான்பியான் ஒரு பொழுது போக்கு பூங்காவில் உள்ள குளத்தில் ஊழியர் குடிபோதையில் செய்த தவறால் சுனாமி உண்டானது. உலகெங்கும் உள்ள பல பொழுது போக்கு பூங்காக்களில் அலைபாயும் கடல் போன்ற குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வருவோர் அந்த குளத்தில் இறங்கிக் குளிக்கும் போது செயற்கையாக உருவாக்கப்பட்ட அலைகள் மோதி கடலில் குளிப்பது போன்ற ஒரு மகிழ்வை உண்டாகும்.

 

சீன நாட்டில் யான்பியான் நகரில் உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் இத்தகைய குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் பணி புரியும் ஊழியர் அலையின் வேகத்தை அதிகப்படுத்தியும் மட்டுப்படுத்தியும் உண்மைக் கடலைப் போன்ற உணவரி கொணர்வது வழக்கமாகும்.இவ்வாறு அலைகளைக் கட்டுப்படுத்தும் இயந்திரத்தை இயக்கும் ஊழியர் குடி போதையில் பணிக்கு வந்துள்ளார்.

 

அவர் அந்த அலைகளின் வேகத்தை மாற்றும் போது அதிக பட்ச வேகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதனால் மிகவும் பெரிய சுனாமி போன்ற அலை மக்களைத் தாக்கி உள்ளது.இந்த நிகழ்வு வீடியோ படமாக சமூக வலைத் தளங்களில் பதியப்பட்டு வைரலாகி உள்ளது.


Leave a Reply