நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள மேங்கோரஞ் எஸ்டேட் பகுதியில் இருந்து கொளப்பள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது.இந்த பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 

இதன் அருகில் உள்ள எலியஸ் கடை மற்றும் மேங்கோராஞ் ஏலமன்னா வனப்பகுதிக்குள் அடிக்கடி யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

 

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று குடியிருப்பின் அருகே சுற்றிக்கொண்டு இருந்தது.

அப்போது,இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது கருப்பையா (50) என்பவரை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை தூக்கி அடித்தது.இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 

சம்பவம் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

 

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இச்சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply