வெகுவிமரிசையாக நடைபெற்ற மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா!பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் 28 ஆம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.முன்னதாக வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 28 ஆம் தேதி ஞாயிறன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

 

அதனை தொடர்ந்து அன்று மாலை அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.அதனை தொடர்ந்து நேற்று மாலை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருக்குண்டம் இறங்குதல் நிகழ்வு அம்மன் அழைப்புடன் இன்று அதிகாலை 6 மணியளவில் நடைபெற்றது.

கோவில் தலைமை பூசாரி தண்டபாணி சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் முதலில் குண்டம் இறங்கினார். பின்னர், ஆண்களும்,பெண்களும்,குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு அருளாசி பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்வில் கோவை,திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர் குண்டம் இறங்கி பத்ரகாளியம்மனை தரிசித்து சென்றனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி மணி தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும்,பக்தர்களின் வசதிக்காக கோவை,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 100 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் போக்குவரத்துறையின் சார்பில் இயக்கப்பட்டன.விழா ஏற்பாடுகளை திருக்கோவில் இணை ஆணையர் வர்ஷினி மேற்கொண்டார்.


Leave a Reply