இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ‘மருத்துவமனை தின விழா’

இராமநாதபுரத்தில் மருத்துவமனை தின விழா மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளை (ஜூலை 30) மருத்துவமனை தினமாக அறிவித்து தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். இதன்படி, இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நடந்த விழாவிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமை வகித்தார்.

மூத்த மருத்துவர்கள் மலையரசு, முகைதீன் பிச்சை முன்னிலை ஆகியோர் வகித்தனர், அரசு ரத்த வங்தி டாக்டர் ஞானக்குமார் வரவேற்றார். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. டாக்டர்கள் சிவானந்தவல்லி, சிவக்குமார், கண்ணகி, வள்ளி பிரியா, தலைமை மருந்தாளுநர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply