திருப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. திருப்பூரில் வசித்து வந்த தம்பதிகள் சக்திவேல் மற்றும் ரேணுகா.
இவர்கள் இருவரும் பெற்றோர் சம்மதிக்காததால் காதல் திருமனம் செய்துகொண்டு திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்வில் சமூகவலைதளங்களால் விரிசல் எழ ஆரம்பித்துள்ளது.
கணவர் சக்திவேல் தன் மேல் அன்பாக இல்லாமல் சமூகவலைதளங்களிலேயே எந்நேரமும் மூழ்கியிருந்ததாக ரேணுகா அடிக்கடி அவரிடம் குறைபட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத சக்திவேல் சமூகவலைதளங்களே கதி என்று இருந்துள்ளார்.இதனால் மனமுடைந்த ரேணுகா தேவி சக்திவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துக்கொண்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.