பாதுகாப்புக்கு வந்த சப் இன்ஸ்பெக்டருக்கு முத்தம் கொடுத்த போதை இளைஞர்

பாதுகாப்புக்கு வந்த சப் இன்ஸ்பெக்டருக்கு முத்தம் கொடுத்த போதை இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தெலங்கானாவில் போனலு திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். காளியை கொண்டாடும், இந்த விழா, ஐதராபாத் மற்றும் செகந்தராபாத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. ஏராளமான பெண்களும் ஆண்களும் இந்த விழாவை விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

 

பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.ஐதராபாத்தில் நடந்த விழாவுக்காக, சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரா, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சில இளைஞர்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.  அதிலிருந்த ஒரு போதை இளைஞர், அந்த வழியாக சென்ற சப் இன்ஸ்பெக்டரை இழுத்து உதட்டில், நச்சென்று முத்தம் ஒன்றைக் கொடுத்தார். இதை எதிர்பார்க்காத சப் இன்ஸ்பெக்டர் அந்த இளைஞரை தள்ளிவிட்டுவிட்டு, அறைந்தார்.

பின்னர் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவர் பெயர் பானு என்பதும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிவதும் தெரியவந்தது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.


Leave a Reply