சி.எஸ்.ஐ. தேவாலய தலைவர் பதவி விலக கோரி திருமண்டல உறுப்பினர்கள்,மற்றும் சபை உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை போத்தனூர் சி.எஸ்.ஐ. தேவாலய தலைவர் பதவி விலக கோரி திருமண்டல உறுப்பினர்கள்,மற்றும் சபை உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு.கோவை,போத்தனூர்,பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் ஆலயத்தலைவராக கெர்சோம் ஜேக்கப் செயல்பட்டு வந்தார்.

 

இந்நிலையில் நான்கு வருடங்களாக திருச்சபையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அதன் தலைவர், கெர்சோம் ஜாக்கப், செயலாளர் இஸ்ரவேல், மற்றும் பொருளாளர் சம்பத் ஞானராஜா ஆகியோர் ஈடுபடுவதாககூறி, திருச்சபையை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மக்கள். தேவாலய வளாகத்திற்க்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கமிட்டி உறுப்பினர் கிறிஸ்டோபர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருச்சபையின் தலைவர் கெர்சோம் ஜாக்கப், முறையாக தேர்தல் நடத்தாமல், தேவாலயத்தின் பல இலட்சம் ரூபாயை கையாடல் செய்ததாககூறி நிர்வாக உறுப்பினர்கள், பேராயரிடம் புகாரளித்துள்ளதாகவும்,இதனைதொடர்த்து பேராயர் விசாரணை நடத்தி கெர்சோம் ஜேக்கப்பை தலைவர் பதவியி இருந்து நீக்கியும், தேவாலயத்தின் வங்கி கணக்கை முடக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஆனால் தன்மீது புகாரளித்த நிர்வாக உறுப்பினர்களை ஜேக்கப் நீக்கிவிட்டு, அவருக்கு ஒத்துழைப்பு தருபவர்களை சபையில் இணைத்துள்ளதாகவும் தலைவர் பதவியில் இல்லாத ஒருவர் எப்படி நிர்வாக உறுப்பினர்களை நீக்க முடியும், என கேள்வி எழுப்பினர். எனவே, தொடர்ந்து ஊழல் செய்யும் இந்த பேராயர் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் ஆலய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சி. எஸ்,ஐ. திருமண்டல உறுப்பினர்கள், சபையை சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கூடியுள்ளதால் ஆலய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply