பிக்பாஸ் ஹோம் மேட்ஸ்க்கு அடுத்த ஆப்பு! லாஸ்லியா செய்த காரியம்

பிக்பாஸ் சீசனில் போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யும் முறையில் அதிரடியான மாற்றத்தை நிகழ்ச்சிக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதற்காக ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபர்களை கன்பெஷன் அறையில் அமர்ந்து பிக்பாஸிடம் சொல்ல வேண்டும்.

 

அதில் போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் வரிசைப்படி வெளியேற்றப்பட இருக்கும் நபர்கள் அறிவிக்கப்படுவர். இவர்களில் ஒருவர் வார இறுதியில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்.இதில் ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை தேர்வு செய்வது இருவருக்கும் தெரியாது.

 

இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது நிகழ்ச்சிக்குழு. அதன்படி மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் வெளியேற்ற விரும்பும் நபரை 2 தக்க காரணங்களுடன் அறிவிக்க வேண்டும். இதையறிந்த போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஒவ்வொரு வாரமும் ஆப்பு அதிகரித்து வருவதாக அபிராமி கூறுகிறார். இதையடுத்து லாஸ்லியாவை அழைத்து நாமினேஷன் செய்யும்படி பிக்பாஸ் கூறுகிறார். அப்போது அவர், மதுமிதா மற்றும் சாக்‌ஷியை அனைவரின் முன்னிலையில் தேர்வு செய்கிறார்.


Leave a Reply