சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு 25 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் கோவையில் இருந்து புறப்பட்டது

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் கோவை சிஎம்எஸ் கல்லூரி சார்பில் 25 நாடுகளை சுற்றி வரும் விழிப்புணர்வு வாகனம் அக்கல்லூரியில் இருந்து புறப்பட்டுள்ளது. சர்வதேச புலிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில் உலகளவில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை பெருக்க சர்வதேச அளவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சி எம் எஸ் கல்லூரி மற்றும் உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது WTF மற்றும் உலகளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கயான 4000 என்பதை வலியுறுத்தும் விதமாக WTF 4000 என்ற வரைபடம் போன்று மாணவ மாணவிகள் புலிகளின் முகமூடி அணிந்து அணிவகுத்து நின்றனர்.

இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த கௌதம் மேனன் மற்றும் பால் ஆகியோர் புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தி கார் மூலம் தங்கள் பயணத்தை துவக்கினர்.கல்லூரி் மைதானத்தில் அதற்கான பயணத்தை ஏற்கனவே கார் மூலம் உலகை சுற்றி வந்த கோவையை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பயணமானது கோவையில் துவங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக சீனா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், கஜகஸ்தான்,ரஷ்யா,ஹங்கேரி,ஜெர்மன்,இத்தாலி என சுமார் 24 நாடுகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு பிரான்சில் முடிவடைகிறது.

65 நாள் பயணமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் சுமார் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்வதாக உலக புலிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.இதேபோல் புலிகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் கைகோர்க்க வேண்டும் என இதில் பங்கேற்ற மாணவ மாணவர்கள் வலியுறுத்தினர்.


Leave a Reply