எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? ஸ்டாலின் ட்விட்டரில் ஆவேசம்

தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழ் உருவாகி 2300 ஆண்டுகள் தான் ஆகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங்கில பாடப்புத்தகத்தில் தொன்மையான மொழிகள் உருவான ஆண்டுகள் கறித்து கலிஃபோர்னியா பல்கலைக்கழக தமிழ் பேராசிரியான ஜார்ஜ் எல்.ஹெர்ட் என்பவர் எழுதிய பாடம் இடம் பெற்றுள்ளது.

 

அதில் தமிழ் கி.மு. 300ஆண்டில் உருவானதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது 2300 ஆண்டுகள் தான் ஆகியுள்தாம். அதேநேரம் சீன மொழி கி.மு. 1250 ஆண்டிலும் (3250 ஆண்டுகள் முன்பு) , சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டிலும் (4 ஆயிரம் ஆண்டுகள் முன்பு), கிரேக்கம் கி.மு.1500 (3500 ஆண்டு முன்பு) ஆண்டிலும் உருவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.


Leave a Reply