மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ.வி. சார்ஜருக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த மத்திய பட்ஜெட்டில், உள்நாட்டில் தயாராகும் மின்சார வாகனங்களுக்கு 12 சதவிகித வரியில் இருந்து ஐந்து சதவிகிதமாக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் :
ஸ்கூட்டர் ரிப்பேர் ஷோரூமை கொளுத்திய கஸ்டமர்
வார இறுதி நாள்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
தமிழகத்தில் தொடங்கியது ஓணம்..!
புதுவையில் மீனவர்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதம்..!
மோசடிக்கு உடந்தையாக இருந்த ஈ சேவை மைய உரிமையாளர்..!
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மத போதகர் கைது..!