நடிகர் தனுஷ் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் நடுக்கடலில் பேனர்!

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் தனுஷ் வரும் 28ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வித்தியாசமான முறையில் அவருக்கு நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர்.காந்தி சிலையின் பின்புறம் நடுக்கடல் பகுதியின் பழைய துறைமுக கம்பிகள் மீது பிறந்தநாள் வாழ்த்து பேனரை ரசிகர்கள் அமைத்துள்ளனர்.


Leave a Reply