சதுப்புநில காடுகள் தினத்தை முன்னிட்டு வனசரகம் சார்பில் விழிப்பணர்வு நிகழ்ச்சி

தொண்டி அருகே உலக சதுப்புநில காடுகள் தினத்தை முன்னிட்டு சதுப்பு நில காடுகளை பாதுகாத்தல் பற்றிய விழிப்பணர்வு நிகழ்ச்சி வனசரகம் சார்பில் நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் வகசரகம் சார்பில் சதுப்பு நில காடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த பகுதியில் அதிக அளவில் சதுப்புநில காடுகள் உள்ளது பார்ப்பதற்கு அழகாகவும் அதை கண்டுகழிக்க வனத்துரை சார்பில் படகுச் சவாரி மற்றும் தனிநபர் படகு சவாரி செய்து அழகாக உள்ள சதுப்புநில காடுகளை பொது மக்கள் கண்டு கழிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வனசரகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இன்று உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு கடலோர வன சரக அலுவலகத்தால் சதுப்பு நில காடுகளை பாதுகாப்பது எப்படி அதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் சதுப்பு நில காடுகளை பாதுகாப்பது மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்த பதாகைகளுடன் பேரணி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து தனி நபர் படகுப் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொது மக்கள் மற்றும் சுற்றுலா சென்ற மக்கள் கலந்து கொண்டார்கள். ஏற்பாடுகளை மாவட்ட கடலோர வன சரக அலுவலகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.


Leave a Reply