கோவை மாவட்டம் சூலூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி காரில் பயணம் செய்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் எர்ணாகுளம் பட்டாம்பி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத்.கட்டிட காண்டிராக்டராக வேலை செய்து வருகிறார்.இவரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இவர் இவருடன் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேருடன் நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல காரில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது,அல்லது பைபாஸ் சாலையில் திருச்சியில் இருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக காரும்,லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.காரின் டிரைவர் முகமது பஷீர் சீட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தால் அவர் உட்பட 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால்,அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.லாரியும்,காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.