பிரபல நடிகை பாஜகவில் இணைகிறாரா?

பிரபல தமிழ் நடிகை ஒருவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வள்ளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறியப்பட்டவர் பிரியா ராமன். தொடர்ந்து சூரிய வம்சம், சின்ன ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

இவர் நேசம் புதுசு படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

 

தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரியா ராமன், நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிலையில் பிரியா ராமன், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை காயத்ரி ரகுராம் நடிகர் நெப்போலியன், நடிகர் எஸ்வி சேகர் உள்ளிட்டோர் பாஜகவில் உள்ளனர். பிரியா ராமனின் முன்னாள் கணவரான ரஞ்சித் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமகவில் இணைந்தார். பின்னர் கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் திமுகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply