ரீல் படத்தின் ஆடியோ கோவையில் ரிலீஸ் !!!

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ரீல் படத்தின் ஆடியோ கோவையில் வெளியிடப்பட்டது. சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோவையில் முழுவதுமாக எடுக்கப்பட்ட திரைப்படம் ரீல்.கிராமம் மற்றும் நகர பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் உதய் ராஜ், அவந்திகா மற்றும் கலக்கபோவது யாரு சரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது.

 

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கேப்டன் மேத்யூஸ், புதுமையான கதைகளத்தை கொண்டு உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கே.ஜி நிறுவனத்தின் நிறுவனர் பக்தவக்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Leave a Reply