திண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 26 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். திண்டுக்கல் அருகே, வடமதுரை முள்ளிப்பாடியில் புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளி உள்ளது. தனியார் வேன் மூலம் சில கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் 30 மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளிக்கு வேன் கிளம்பியது. வேனை வடமதுரையை சேர்ந்த பாண்டீஸ்வரன் ஓட்டி வந்தார்.மோளப்பாடி பகுதியில் எதிரில் வந்த ஆம்னி பஸ்சுக்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது, திடீரென சாலையோர பள்ளத்திற்குள் வேன் கவிழந்தது.
இந்த விபத்தில் எட்டிக்குளத்துப்பட்டியை சேர்ந்த அஜய், இ.புதூரை சேர்ந்த கவுசல்யா, மோளப்பாடியை சேர்ந்த யுவராணி, அர்ச்சனா, மகாலட்சுமிபுரத்தை சேர்ந்த யாசிகா உள்ளிட்ட 26 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த மாணவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக வழக்குப்பதிந்த வடமதுரை போலீசார், டிரைவர் பாண்டீஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.