ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ்க்கு மூளையில் பலத்த காயம்! உயிரிழப்பு

ரஷ்ய குத்துச்சண்டை கூட்டமைப்பு மேரிலாந்தில் நடந்த குத்து சண்டையின் போது ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ் தலையில் அடிபட்டு ஏற்பட்ட மூளைக் காயங்களால் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

 

மாக்சிம் தலையில் அமெரிக்காவில் நடந்த குத்து சண்டையின் போது பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையும் தலையில் மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்பானது அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Leave a Reply