ஆகஸ்ட் 5 பொது விடுமுறை! தமிழக அரசு உத்தரவு

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 543 தொகுதிகளில் தமிழகத்தின் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலானது நிறுத்திவைக்கப்பட்டது.இந்த தொகுதியில், பணம் சிக்கியதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

 

இதனை அடுத்து தேர்தல் பின்னர் அறிவிக்கப்பட்டு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

ஜூலை 11 முதல் 18 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply